Translate: Many specialties from East Malaysia such as herbal tea can be found in local markets. Singapore and Sarawak State of Malaysia signed 8 joint agreements at the Sarawak-Singapore Business Seminar Exhibition held last Friday at the SunTech Conference and Exhibition Center.
Speaking at the event, Trade and Industry Minister Chan Chun Singh noted that Sarawak could sell its products on a regional and global scale with Singapore as a base. The Minister said Singapore could continue to use the powerful Sarawak market to continuously import its food from different locations.
Singapore is one of Sarawak’s major trading partners. He also said that the two sides could further strengthen the relationship with the tourism and agribusiness sectors. Last Friday, the Sarawak Department of Commerce and Tourism officially opened.
Commenting on the opening of the new office in Singapore, Putrie Rozana, Deputy CEO of Singapore’s Sarawak, said the company was optimistic about the increase in tourism. More than 800 business representatives from different sectors participated in this one-day trade seminar and exhibition.
மூலீகை தேநீர் போன்ற கிழக்கு மலேசியாவிலிருந்து வரும் பிரத்தியேகப் பொருட்கள் பலவற்ற இனி உள்ளூர் சந்தைகளில் எதிர்ப்பார்க்கலாம்.
சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சரவாக்- சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கு கண்காட்சியில் சிங்கப்பூரும் மலேசியாவின் சரவாக் மாநிலமும் 8 கூட்டு ஒப்பந்தகங்களில் கையெழுத்திட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூரை ஒரு தளமாகக் கொண்டு சரவாக் அதன் பொருட்களை வட்டார அளவிலும் உலகளவிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
தமது உணவு பொருட்களைச் சிங்கப்பூர் தொடர்ந்து வெவ்வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய, ஆற்றல்மிக்க சரவாக் சந்தையைச் சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.
சரவாக்கின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் விளங்குகிறது.கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு அதன் ஏற்றுமதி மொத்தம் 1.2 பில்லியன் ரிங்கிட் தொகையாக இருந்தது.
இருதரப்பினருக்கிடையே சுற்றுலா, விவசாய வர்த்தகத் துறைகளிலும் இணக்கம் கண்டு உறவை மேலும் வலுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சரவாக் வர்த்தக, சுற்றுலா துறை அலுவலகம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இந்த புதிய அலுவலகத்தின் திறப்பை முன்னிட்டு, சிங்கப்பூரிலிருந்து சரவாக்கிற்கான சுற்றுலா நடவடிக்கைகள் 30% அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக அந்த அலுவலகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி புத்ரி ரொசானா குறிப்பிட்டார்.
இந்த ஒரு நாள் வர்த்தகக் கருத்தரங்கு, கண்காட்சியில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வர்த்தக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
[real3dflipbook id=”3″ mode=”normal”]
[real3dflipbook id=”2″ mode=”normal”]
[real3dflipbook pdf=”https://statos.com.sg/wp-content/uploads/2020/04/eat-chiak-makan-sarawak-food-trail.pdf” id=”1″ mode=”normal”]